உள்ளூர் செய்திகள்

வேளாண்மை கணக்கெடுப்பு தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நில ஆவண பதிவேடுகளை கொண்டு வேளாண் கணக்கெடுப்பு பணி: கலெக்டர் தகவல்

Published On 2022-09-03 15:11 IST   |   Update On 2022-09-03 15:11:00 IST
  • வேளாண்மை கணக்கெடுப்பு பணி 1970-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • நீர்ப்பாசன வசதிகள் மற்றும் இடு பொருட்களின் பயன்பாடு போன்றவற்றின் விவரங்கள் சேரிக்கப்ப டவுள்ளது.

கள்ளக்குறிச்சி, செப்.3-

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட புள்ளியியல் துறையின் சார்பில், 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:- இந்தியாவில் வேளாண்மை மற்றும் விவசா யிகள் நல அமை ச்சகத்தின் மூலம் வேளா ண்மை கணக்கெடுப்பு பணி 1970-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேளாண் கணக்கெடுப்புகள் இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெற்று வந்தது. தற்போது, 5 ஆண்டு களுக்கு ஒருமுறையாக 2021-2022-ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு, 11-வது வேளாண் கணக்கெடுப்புப் பணி நடைபெறவுள்ளது. இந்த கணக்கெடுப்பின் நோக்கம் புள்ளி விவரங்களின் அடிப்படையில் புதிய வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் வகுப்பதற்கும் மதிப்பீடு செய்வதற் கும் பயன்படுகிறது. கணக்கெடுப்பின் மூலம் கைப்பற்றின் வகைகள், கைப்பற்றின் எண்ணிக்கைகள் நிலப் பயன்பாடு, பயிரிடும் வகைகள், நீர்ப்பாசன வசதிகள் மற்றும் இடு பொருட்களின் பயன்பாடு போன்றவற்றின் விவரங்கள் சேரிக்கப்படவுள்ளது.

அனைத்து வருவாய் கிராமங்களிலும், நில ஆவணப்பதிவேடுகளில் உள்ள விவரங்களின் அடிப்படையில், விவரங்களை மறு அட்டவணைப்படுத்திடும் பொருட்டு ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அனைத்து சர்வே, சப் டிவிஷன் எண்களையும் ஆராய்ந்து கைப்பற்றுகளின் எண்ணிக்கை மற்றும் பரப்பு விவரங்களை வகுப்பு வாரியாக சேகரிக்கப்படவுள்ளது. முதல்முறையாக கணினிமயமாக்கப்பட்ட நில ஆவண பதிவேடுகளை அடிப்படையாக கொண்டு, வேளாண் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிக்காக பிரத்யேகமாக வடிவ மைக்கப்பட்ட மி ன்பொருள் செயலியை பயன்ப டுத்தி, கைப்பேசி மற்றும் கையடக்கக் கணினி, மடிக்கணினி வழியே கணக்கெடுப்புப்பணி நடை பெறவுள்ளது. மிக முக்கியமான பணிகளில் ஒன்றான வேளாண் கணக்கெடுப்புப் பணியினை தொடர்புடைய அலுவலர்கள் சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் லதா, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகலட்சுமி, தாசில்தா ர்கள், வட்டார புள்ளியில் ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News