உள்ளூர் செய்திகள்

அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.

அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு; உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு

Published On 2023-09-19 09:30 GMT   |   Update On 2023-09-19 09:30 GMT
  • உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.
  • இலவச வீட்டு மனை பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பாபநாசம்:

பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் சரகம் அன்னப்பன்பேட்டை கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் சிறு விவசாயிகள் அனுபவித்து வரும் நத்தம் இடத்தை வேறொருவர் நபர்களுக்கு சிட்டா அடங்கல் வழங்கி நில அபகரிப்பு செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அம்மாபேட்டை விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய குழுவின் சார்பில் உண்ணாவிரதபோராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

இதுகுறித்து பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் வட்டாட்சியர் பூங்கொடி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மெலட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் மகாபிரபு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், விவசாய சங்க மாவட்ட செயலாளர் தர்மராஜன், ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய தலைவர் சின்னராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கொத்தங்குடி கிராமத்தில் முறைகேடாக வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்ததை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது என விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News