உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு தேக்கடிக்கு தமிழக பஸ்கள் செல்ல தடை இல்லை

Published On 2022-07-31 10:45 IST   |   Update On 2022-07-31 10:45:00 IST
  • பெரியாறு புலிகள் காப்பக சோதனைச் சாவடியில் கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனர்.
  • பேச்சு வார்த்தையில், தேக்கடிக்கு தமிழக அரசு பஸ்கள் தடையின்றி செல்ல உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

கம்பம்:

தமிழக-கேரள அதிகாரிகள் இடையே நடந்த பேச்சு வார்த்தையில், தேக்கடிக்கு தமிழக அரசு பஸ்கள் தடையின்றி செல்ல உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் மதுரையில் இருந்து தேக்கடிக்கு சென்ற தமிழக அரசு பஸ்சை தேக்கடியில் உள்ள பெரியாறு புலிகள் காப்பக சோதனைச் சாவடியில் கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனர். இந்த நிகழ்வு தமிழக தரப்பில் பதற்ற நிலையை ஏற்படுத்தியது. இதையடுத்து விவசாய சங்கத்தினர் எல்லையில் கேரள வாகன ங்களை தடை செய்யப்போவ தாக அறிவித்தனர்.

இந்நிலையில் தேக்கடியில் தமிழக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், கேரள வனத்துறையினர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தமிழகத்திலிருந்து வழக்க மாக வரும் புறநகர் மற்றும் 2 நகர பஸ்களுக்கு தடை இல்லை. எரிபொருள், பணியாளர் நேரம் கருதி குமுளி பணிமனையிலேயே நிறுத்திக்கொள்ளலாம். பஸ்சில் வரும் பயணிகள் ஆனவாச்சல் நிறுத்தம் அல்லது சோதனைச்சா வடியில் நுழைவுச்சீட்டு எடுக்க வேண்டும்.

பஸ்சில் தடை செய்ய ப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது. தேக்கடியில் பணியாற்றும் அதிகாரிகள், பணியா ளர்கள், மாணவ-மாணவி கள் செல்ல தடையில்லை என முடிவு செய்யப்பட்டது.

கேரள அரசு தரப்பில் பெரியாறு காப்பக உதவி இயக்குனர் ஷில்பாகுமார், தமிழக அரசு தரப்பில் தேனி அரசு போக்குவரத்துக் கழக கோட்டப்பொறியாளர் (பொறுப்பு) மணிவண்ணன், குமுளி கிளை மேலாளர் ரமேஷ், கம்பம் கிளை மேலாளர் சுப்பிரமணியன் மற்றும் தமிழக-கேரள போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News