உள்ளூர் செய்திகள்

சாலையில் முறிந்து கிடந்த மரத்தை அகற்றும் பணி நடைபெற்றது.

கொடைக்கானல்-பழனி சாலையில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-06-05 12:31 IST   |   Update On 2023-06-05 12:31:00 IST
  • மேல்ப ள்ளம், ஏலக்காய் வளைவு உள்ளிட்ட இடங்களில் 3 மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
  • தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து சாலையில் முறிந்து கிடந்த மரங்களை போராடி அகற்றினர்.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும் மாலை நேரங்களில் அவ்வப்போது மழையும் பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று மாலை சூறைக்காற்று டன் திடீரென கன மழை பெய்தது.

இதனால் வெள்ள ப்பாறை, பி.எல்.செட், சவரிக்காடு, ஏலக்காய் வளைவு, மேல்பள்ளம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்று வீசியது. கொடைக்கானல்- பழனி மலைச்சாலையில் மேல்ப ள்ளம், ஏலக்காய் வளைவு உள்ளிட்ட இடங்களில் 3 மரங்கள் முறிந்து சாலையில் விழு ந்தன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்திருந்தனர். மாலையில் அவர்கள் ஊர் திரும்பியபோது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் கடும் அவதி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சா லைத்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து சாலையில் முறிந்து கிடந்த மரங்களை போராடி அகற்றினர். சுமார் 3 மணி நேரத்துக்கு பின்னர் மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது.

Tags:    

Similar News