உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?-தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேள்வி

Published On 2022-07-11 10:01 GMT   |   Update On 2022-07-11 10:01 GMT
  • காங்கிரஸ் கட்சி தலைவி சோனியாகாந்தி, ராகுல்காந்தி மீது சம்மன் அனுப்பி 5 நாட்களாக 50 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை இப்போது வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.
  • கோடிக்கணக்கில் முறைகேடு செய்த அ.திமு.க.வினர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ். முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த 10ஆண்டு காலமாக தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான முறைகேடு மூலம் முன்னாள் அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டு அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்து உள்ளார்கள் என்பது தற்போது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதன் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

ஆனால் அவர்கள் மீது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது வியப்பாக உள்ளது. காங்கிரஸ் கட்சி நடத்தும் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை வாங்கியது சம்பந்தமாக எந்த முறைகேடும் கண்டுபிடிக்க முடியாத நேரத்திலும்,முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமலேயே காங்கிரஸ் கட்சி தலைவி சோனியாகாந்தி, ராகுல்காந்தி மீது சம்மன் அனுப்பி 5 நாட்களாக 50 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை இப்போது வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கோடிக்கணக்கில் முறைகேடு செய்த அ.திமு.க.வினர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இல்லையேல் காங்கிரஸ் கட்சி சார்பில் தூத்துக்குடியில் மக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News