முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தியபோது எடுத்தபடம்.
பிறந்தநாளையொட்டி ஜெயலலிதா படத்திற்கு அ.தி.மு.க.வினர் மரியாதை
- நெல்லையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன் உள்பட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெய லலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெட்டி யார்பட்டி நாராயணன், முருகையாபாண்டியன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் பெரிய பெருமாள், மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம்,
ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், மருதூர் ராமசுப்பி ரமணியன், டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால்கண்ணன், கவுன்சிலர் சந்திரசேகர், நிர்வாகிகள் சீனிமுகம்மது சேட், வெள்ளப்பாண்டி, ஜெய்சன் புஷ்பராஜ், பழையபேட்டை கணேஷ், பாறையடி மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.