கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல.ஏ. பேசிய போது எடுத்த படம். அருகில் மாவட்ட செயலாளர்கள் அசோக்குமார் , பாலகிருஷ்ணரெட்டி , தமிழ்செல்வம் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
- தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது.
- செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வ லியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் நேற்று நடைபெற்றது. இதற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வ லியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ், முனிவெங்கட்டப்பன், கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தங்கமுத்து, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.