உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. பிரமுகர் மீது தாக்குதல்: கூடுதல் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

Published On 2023-09-26 07:22 GMT   |   Update On 2023-09-26 07:22 GMT
  • பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு உளுந்தூர் பேட்டை நகர அ.தி.மு.க. பொதுக்கூட்டம் கடந்த 20-ந் தேதி நடைபெற இருந்தது
  • தி.மு.க.வினர்அ.தி.மு.க டிஜிட்டல் பேனர்களை கிழித்து கொண்டிருந்தனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் துரை (வயது 57). உளுந்தூர்பேட்டை நகர அ.தி.மு.க. பொருளாளராக உள்ளார். இவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லாலிடம் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு உளுந்தூர் பேட்டை நகர அ.தி.மு.க. பொதுக்கூட்டம் கடந்த 20-ந் தேதி நடைபெற இருந்தது. இந்த பொதுக்கூட்டத்திற்காக காவல்துறை அனுமதி பெற்று நடைபெற இருந்தது. இந்த பொதுக் கூட்டத்திற்காக காவல்துறை அனுமதி பெற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 20-ந் தேதிகாலை 10மணியளவில் பஸ் நிலையம் அருகே எனது இருக்கசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்த போது தி.மு.க.வினர்அ.தி.மு.க டிஜிட்டல் பேனர்களை கிழித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த என்னை அவர்கள் ஒன்றுக்கூடிக்கொண்டு எனது இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி என்னை கையாலும், காலாலும் சரமாரியாக தாக்கி வேட்டியை உருவி கிழித்து எறிந்து அரை நிர்வாணப்படுத்தி என்னை பொதுமக்கள் மத்தியில் மானபங்கம் செய்தனர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.அங்கு வந்த காவல்துறையினர் என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் உதவியுடன் அனுப்பி வைத்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளேன். அந்த நபர்கள் மீது உரிய விசாரணைநடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News