உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை- கலெக்டர் தகவல்

Published On 2022-10-21 08:52 GMT   |   Update On 2022-10-21 08:52 GMT
  • கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் ஆகிய தொழிற்பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.
  • தகுதியுள்ள பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022 ஆம் ஆண்டு சேர்க்கைக்கு இரண்டு கட்டங்களாக கலந்தாய்வு முடிந்துள்ளது.

இதில் மகளிர் பிரிவுகளான இயந்திர மின்னணுவியல் மற்றும் கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் ஆகிய தொழிற்பிரிவுகளில் காலியிடங்கள் அதிகமாக உள்ளன.

பொது பிரிவான தொழிற்சாலை வர்ணம் பூசுபவர் தொழிற்பிரிவில் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன.

எனவே இதில் சேர விருப்பம் உள்ள 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக வந்து சேர்ந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு இலவச பஸ் கட்டண சலுகை, விலையில்லா சைக்கிள், சீருடைகள், காலணி, வரைபடக்கருவி, நோட்டு புத்தகம் போன்றவை வழங்கப்படும்.

தவிர அனைத்து பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.750 உதவி தொகை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 7708709988, 9442705428, 9442521649, 9943130145 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News