உள்ளூர் செய்திகள்

கோவை மாநகரில் அனைத்து பகுதிகளிலும் கூடுதல் கண்காணிப்பு காமிராக்கள்

Published On 2022-11-07 09:10 GMT   |   Update On 2022-11-07 09:10 GMT
  • கோவை மாநகரில் சுமார் 5,400 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
  • கண்காணிப்பு காமிராக்களில் பதிவுகளை கொண்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோவை,

கோவையில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், முக்கிய சாலை சந்திப்புகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பாதுகாப்புக்காக கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கண்காணிப்பு காமிராக்களில் பதிவுகளை கொண்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோவையில் மாநகர பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் அதிக அளவில் அளவில் பொருத்தப்பட்டு உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் உள்ள கேமராக்கள் பழுதடைந்துள்ளதால், முக்கிய மான நிகழ்வுகளி ன்போது அவற்றிலிருந்து ஆதாரங்க ளைச் சேகரிக்க முடியாத நிலை உள்ளது.

இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:- கோவை மாநகரில் சுமார் 5,400 கண்காணிப்பு காமிராக்க பொருத் தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு காமிராக்களின் தேவை தற்போது அதிகரித்துள்ள து. இந்த சூழலில் அனைத்து முக்கிய பகுதிகளிலும் காமிராக்களை பொருத்துவது கட்டாயமாக்கப்படும்.

முக்கிய சாலை சந்திப்புகள், வழி பாட்டுத்தலங்கள் அமைந்துள்ள சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்து கடைகளின் எதிரிலும்கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட வேண்டும்.இதை கட்டாயமாக செயல்ப டுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ள தால் வருகிற 2 மாதங் களுக்குள் கோவை மாநகரின் அனைத்து பகுதிகளிலும் கூடுதலான அளவில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News