உள்ளூர் செய்திகள்

வில்வமரத்துப்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பங்கேற்ற போது எடுத்த படம்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பின்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

Published On 2023-10-03 09:10 GMT   |   Update On 2023-10-03 09:10 GMT
  • வில்லமரத்துப்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவி தலைமையில் நடைபெற்றது.
  • இலவச வீட்டுமனை பட்டா, வேளாண் இடு பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

விளாத்திகுளம்:

மகாத்மா காந்தியடிகளின் 155-வது பிறந்த நாளை யொட்டி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வில்லமரத்துப் பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண் டார்.

அப்போது அவர் பேசுகையில்:-

பெண்கள் சுயமாக முன்னேற கைத்தொழிலை கற்று கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்புகளை தி.மு.க. அரசு ஏற்படுத்தி தந்து உள்ளது. தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பின்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. மகளிர் உரிமை தொகை நிராகரிப்பட்ட வர்கள் முறையீடு செய்து பரிசீலனை உள்ள பெண்களுக்கு கட்டயம் உரிமை தொகை கிடைக்கும். நிராகரிக்கப்பட்டவர்க ளுக்கு உரிய விளக்கமும் அளிக்கபட்டு உள்ளது.

தகுதி உள்ள அனைவருக்கும் உரிமை தொகை கிடைக்கும். 18-ந்தேதிகுள் இ-சேவை மையம் மூலமாக மேல் முறையீடு செய்து விடவும். கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டசத்து உள்ள உணவை உன்ன வேண்டும். காய்ச்சல் தொடந்து இருந்தால் மருத்துவமனைக்கு உடனடியாக செல்லுங்கள். அலட்சியமாக இருந்து விடாதீர்கள். அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத்தொடர்ந்து இலவச வீட்டுமனை பட்டா, வேளாண் இடு பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோட்டாட்சியர் ஜென் கிறிஸ்டிபாய், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன், திமுக ஒன்றிய செயலா ளர்கள் சின்ன மாரிமுத்து, அன்பு ராஜன், செல்வராஜ், மும்மூர்த்தி, விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன்ராஜ், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News