உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு துறைக்கு புதியதாக வாங்கப்பட்ட வாகனங்களின் சாவிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் வழங்கியபோது எடுத்தபடம்.  

கடலூரில் கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள்: கூடுதல் தலைமைச் செயலர் ஆய்வு

Published On 2023-04-24 15:45 IST   |   Update On 2023-04-25 15:35:00 IST
  • வேளாண் உட்கட்டமைப்பு நிதியில் வாங்கப்பட்ட 2 லாரிகள் மற்றும் 3 சிறிய சரக்குந்து வாகனங்களை பார்வையிட்டார்.
  • மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடனுதவி காசோலைகளை வழங்கினார்.

கடலூர்:

கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வேளாண் உட்கட்டமைப்பு நிதியில் வாங்கப்பட்ட 2 லாரிகள் மற்றும் 3 சிறிய சரக்குந்து வாகனங்களை பார்வையிட்டார். கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நடமாடும் தானியங்கி பண பரிவர்த்தனை எந்திரத்தை பார்வையிட்டார். பின்னர் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடனுதவி காசோலைகளை வழங்கினார்.

கூட்டுறவு துறையின் செயல்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண் டார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதி வாளர் நந்தகுமார், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் திலீப்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், கூட்டுறவு துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News