உள்ளூர் செய்திகள்

ஓசூர் வழியாக 2 ரெயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை- கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்லக்குமார் தகவல்

Published On 2022-07-09 15:30 IST   |   Update On 2022-07-09 15:30:00 IST
  • ஓசூர் ெரயில் நிலையம் அருகில் உள்ள கீழ்மை பாலத்தில் மழைக்காலங்களில் அரை மணி நேரம் மழைக்கு தண்ணீர் நிரம்பி பாதை துண்டிக்கப்பட்டு விடுகிறது.
  • செயல்பாட்டில் இருந்த கேட் எண்கள் 102 மற்றும் 103 மூடப்பட்டது

ஓசூர்,

ஓசூரில், பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக, கிருஷ்ணகிரி எம்.பி டாக்டர் செல்லகுமார் மற்றும் பெங்களூர் கோட்ட மேலாளர் ஷியாம் சிங் ஆகியோர், ரயில்வே நிலையம் அருகே உள்ள பகுதிகளில் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த எம்.பி செல்லகுமார் கூறியதாவது:-

ரயில்வே துறையில் மீட்டர் கேஜில் இருந்து பிராட் கேஜாக மாற்றப்பட்டதிலிருந்து ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த கேட் எண்கள் 102 மற்றும் 103 மூடப்பட்டது.

இதனால் , ஓசூர் கோகுல் நகர் பசுமைத்தாயகம் நகர், பாரதிதாசன் நகர் மற்றும் ஜனகபுரி லே-அவுட் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் சென்று வரவும்,

மருத்துவமனைகளுக்கு செல்லவும் ரயில் பாதையை ஆபத்தான வகையில் கடந்து செல்லும் நிலையில் இருப்பதால் நீண்ட நாட்களாக ரயில்வே துறையிடம் முறையிட்டு வந்தனர்.

எனவே அந்தப் பகுதியில் கீழ்மை பாலம் அல்லது மேம்பாலம் கட்டுவதற்கு மாநில அரசு திட்ட வடிவு அனுப்பினால், ஒரு வாரத்திற்குள் அனுமதி அளிக்க தயாராக இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

அதேபோல ஓசூர் ரயில் நிலையம் அருகில் உள்ள கீழ்மை பாலத்தில் மழைக்காலங்களில் அரை மணி நேரம் மழைக்கு தண்ணீர் நிரம்பி பாதை துண்டிக்கப்பட்டு விடுகிறது. இதனை , விரிவு படுத்துவதற்கான அனுமதியை நெடுஞ்சாலைத்துறை எங்களிடம் கேட்டால் உடனடியாக அனுமதி வழங்கப்படும் என ரயில்வே அதிகாரி ஒப்புக்கொண்டுள்ளனர். அதேபோல அன்னை நகர் பகுதியில் கீழ்மை பாலத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி கேட்டால் வழங்கப்படும் எனவும் கோட்ட மேலாளர் தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட ஓசூர் -பெங்களூர்- எஸ்வந்த்பூர் மற்றும் ஓசூர் வழியாக செல்லும் பெங்களூர்- காரைக்கால் ஆகிய இரண்டு ரயில்களையும் மீண்டும் இயக்க, ரயில்வே துறையில் சார்பில் முழுமையாக ஆய்வு செய்து மீண்டும் இயக்குவதற்கு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என அதிகாரி உறுதி அளித்துள்ளார்". இவ்வாறு செல்ல குமார் எம்.பி.நிருபர்களிடம் கூறினார். அப்போது, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெயப்பிரகாஷ், மாதேஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News