உள்ளூர் செய்திகள்

பெரிய மாரியம்மன் கோவில் உண்டியல் பணத்தை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2023-08-22 15:30 IST   |   Update On 2023-08-22 15:30:00 IST
  • விசாரிக்கும் போது அதே பகுதியைச் சேர்ந்த பருவதன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் பணத்தை எடுத்துச் சென்றதாக பூசாரி தெரிவித்தார்.
  • பூசாரியை காவலில் எடுத்து விசாரித்தால் உண்மை தெரியவரும்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று மக்கள் குறைத்தீர்க்கும் முகாமில் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வந்தனர். அந்த மனுவில் அப்பகுதி பொதுமக்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தில் 18 கிராம மக்கள் வழிபடும் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த சிறப்புமிக்க பெரிய மாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியலில் உள்ள பணத்தை கடந்த 18-ந் தேதி அன்று சில மர்ம நபர்கள் திருடி சென்றதாக கோவில் பூசாரி கூறியுள்ளார்.

பொதுமக்கள் சென்று பார்க்கும் போது கோவிலில் போடப்பட்டிருக்கும் 2 பூட்டுகளும் உடைக்கப் படவில்லை. ஆனால் உண்டியல் பணம் மட்டுமே திருடுபோய் உள்ளது தெரியவந்தது. மேலும் நாங்கள் பூசாரியை விசாரிக்கும் போது அதே பகுதியைச் சேர்ந்த பருவதன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் பணத்தை எடுத்துச் சென்றதாக பூசாரி தெரிவித்தார். அதனால் பூசாரியை காவலில் எடுத்து விசாரித்தால் உண்மை தெரியவரும். இது சம்பந்தமாக அறநிலை யத்துறை அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News