உள்ளூர் செய்திகள்

கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மனு கொடுக்க வந்ததை படத்தில் காணலாம்.

வடலூரில் பொய் வழக்கு பதிவு செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இஸ்லாமிய அமைப்பினர் புகார் மனு

Update: 2022-11-26 10:33 GMT
  • இஸ்லாமிய இயக்கங்களின் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
  • வல்துறையின் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூர்:

கடலூர் மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு, இஸ்லாமிய ஐக்கிய ஜமாத், சிதம்பரம் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு மற்றும் கட்சிகள், இஸ்லாமிய இயக்கங்களின் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம் வடலூரில் வசித்து வரும் நஸ்ருதீன் என்பவர் மீது தொடர் பொய் வழக்கு வடலூர் போலீசார் பதிவு செய்து வருகின்றனர். இதனை விசாரணை நடத்தி காவல் நிலைய அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. மேலும் முஸ்லிம் சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடக்கும் காவல்துறையின் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News