உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் விபத்துமளிகை கடைக்காரர் சாவு

Published On 2023-04-22 14:51 IST   |   Update On 2023-04-22 14:51:00 IST
  • ரமேஷ் (வயது 44). இவர் நாமக்கல், சேலம் ரோட்டில் மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தார்.
  • சாலையோரம் குவியலாக இருந்த மண்ணில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன் கீழே சரிந்தார்.

நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள என்.புதுப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44). இவர் நாமக்கல், சேலம் ரோட்டில் மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தார்.

ரமேஷ் கடைக்கு பொரு ட்கள் வாங்குவதற்காக, தனது இருசக்கர வாக னத்தில் நாமக்கல் கடை வீதிக்கு சென்றார். பொரு ட்களை வாங்கிக்கொண்டு மளிகைக்கடைக்கு திரும்பிய அவர், சாலையோரம் குவியலாக இருந்த மண்ணில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன் கீழே சரிந்தார்.

இதில் படுகாயம் அடைந்த ரமேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சேலம் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News