உள்ளூர் செய்திகள்

தமிழரசன்

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

Published On 2022-11-25 15:07 IST   |   Update On 2022-11-25 15:07:00 IST
  • பிரபாவதி மற்றும் கோவிந்தராஜ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
  • தலைமறைவாக இருந்த தமிழரசன் அவனது வீட்டிற்கு நேற்று வந்த போது கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள லிங்கநாயக்கனஅள்ளி பகுதியை சேர்ந்த மாது. இவரது மகன் தர்மதுரை (வயது 36). இவரது மனைவி பிரபாவதி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கணவன் தர்மதுரை கண்டித்துள்ளார். இந்த நிலையில் தர்மதுரை மகுடஞ்சாவடி - வீரபாண்டி இடையிலான ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இவரது இறப்பு குறித்து சேலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தீவட்டிபட்டி போலீசில் கோவிந்தராஜ் வேறொரு வழக்கில் சிக்கினான். அவரிடம் நடத்திய விசாரனையில் தர்மதுரையை கொலை செய்து தண்டவாளத்தில் வீசியது தெரியவந்தது. பின்பு இந்த வழக்கு கடத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி நடத்திய விசாரணையில் கள்ளக்காதலை கண்டித்ததால் கணவனை தோசை சட்டியால் தலையில் அடித்து கொலை செய்து பின்பு கள்ளக்காதலன் கோவிந்தராஜ் மற்றும் தமிழரசன் ஆகியோர் உதவியுடன் உடலை காரில் ஏற்றி தண்டவாளத்தில் வீசியதாக பிரபாவதி தெரிவித்தார். இதையடுத்து பிரபாவதி மற்றும் கோவிந்தராஜ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கொலைக்கு உடந்தையாக இருந்த தமிழரசனை போலீசார் தேடி வந்தனர்.தலைமறைவாக இருந்த தமிழரசன் அவனது வீட்டிற்கு நேற்று வந்த போது கடத்தூர் போலீசார் மற்றும் தனி பிரிவு போலீசார் அவனை கைது செய்து அரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News