உள்ளூர் செய்திகள்

ஆத்தூர் டாஸ்மாக் 15-ந்தேதி முதல் நிரந்தரமாக மூடப்படும் -அதிகாரிகள் தகவல்

Published On 2022-06-28 08:13 GMT   |   Update On 2022-06-28 08:13 GMT
  • ஆத்தூர் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. காா்த்திகேயன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது.
  • டாஸ்மாக் கடையை வருகிற 15-ந் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படுமென்று அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

ஆத்தூர்:

ஆத்தூர் அருகே உள்ள குமராபண்ணையூர், செல்வன்புதியனூர் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும், ஆத்தூர் புன்னைக்காயல் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆத்தூர் மெயின் பஜாரில் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

இதனால் திருச்செந்தூர்- தூத்துக்குடி போக்குவரத்து முடங்கியது. ஏரல், குரும்பூர் வழியாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று மாலை வரை போராட்டம் தொடர்ந்தது. இதனையடுத்து ஆத்தூர் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. காா்த்திகேயன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது.

ஆத்தூா்-புன்னைக்காயல் சாலையிலுள்ள டாஸ்மாக் கடையை வருகிற 15-ந் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படுமென்றும், அதுவரை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போலீஸ் பாதுகாப்புடன் தற்காலிகமாக இயங்குமென்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

மேலும் சாலை அமைப்பதற்கான பணிகள் ஜூலை 15-ந் தேதி தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News