உள்ளூர் செய்திகள்

காவிரி அன்னைக்கு அபிஷேகம்.

காவிரி அன்னைக்கு ஆரத்தி- வழிபாடு

Published On 2022-11-13 10:16 GMT   |   Update On 2022-11-13 10:16 GMT
  • படித்துறையில் காவிரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை.
  • குஞ்சித ராஜ விநாயகர், இரட்டை கால பைரவர் ஆகியோர் சன்னதியில் சிறப்பு வழிபாடு.

கும்பகோணம்:

அகில பாரதீய சந்நியாசிகள் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பாக தலைக் காவிரியிலிருந்து பூம்புகார் வரை 12 ஆம் ஆண்டு ரதயாத்திரை கஞ்சனூர் வந்தது.

கஞ்சனூர் வடகாவிரி படித்துறையில் காவிரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. சூரியனார்கோயில் ஆதீனம் 28-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் அபிஷேகத்தை தொடக்கி வைத்தார். தொடர்ந்து கிராம மக்கள் காவிரி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் சுவாமி ராமானந்தா தலைமையிலான துறவியர்கள் காவிரி நதிக்கு மகா ஆரத்தி வழிபாடு செய்தனர்.

மாணவ -மாணவியர் விளக்கேற்றி காவிரி நதியை வணங்கினர். இதில் கஞ்சனூர் கோட்டூர், துகிலி, மணலூர் கிராம மக்கள் கலந்து கொண்டனர் தொடர்ந்து கதிராமங்கலம் வடகாவிரி படித்துறையில் குஞ்சித ராஜ விநாயகர், இரட்டை கால பைரவர் ஆகியோர் சன்னதியில் சிறப்பு வழிபாடு செய்து படித்துறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மூலவர் காவிரி அம்மன் மற்றும் ரத யாத்திரை காவிரி அம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதில் சிவராமபுரம் வாயு சித்த ராமானுஜர் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் கதிராமங்கலம், சிவராமபுரம் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Tags:    

Similar News