உள்ளூர் செய்திகள்
குதிரை வாகனத்தில் அம்மன் வீதிஉலா நடந்தது.
பஞ்சநதிக்குளம் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா
- மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவின் 10-ம் நாளை யொட்டி காதலிதேவன்காடு மண்டகப்படி உபயதாரர்கள் சார்பில் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு மாலை அணிவித்து, அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
பின்னர், நடந்த பட்டிமன்ற நிகழ்ச்சியில் வெள்ளைச்சாமி நடுவராக பங்கேற்றார். தொடர்ந்து, அதிகாலை யானை வாகனத்தில் அம்மன் வீதிஉலாவும், வாண வேடிக்கையும் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நாட்டாமைகள், மண்டகப்படி உபயதாரர்கள் செய்திருந்தனர்.