உள்ளூர் செய்திகள்

திருநாவலூர் அருகே சமையல் செய்த பெண் தீயில் கருகி பலி

Update: 2022-08-10 08:13 GMT
  • திருநாவலூர் அருகே சமையல் செய்த பெண் தீயில் கருகி பலியானார்.
  • என்னை காப்பாற்றுங்கள் என்னை காப்பாற்றுங்கள் என வீட்டின் வெளியே வந்து அலறினார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே இரும்பை பகுதியை சேர்ந்த பெரியநாயகம்.அவரது மகள் யட்சிதா (வயது 28). இவர் கடந்த 5-ந்தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டுஇருந்தார். அப்போதுஅவரது துப்பட்டாவில் எதிர்பாராத விதமாக தீ பற்றியது. இந்த தீ சற்று நேரத்தில் மலமல என பற்றி எரியத் தொடங்கியது. துப்பட்டாவில் தீ பற்றி எரிவதை அறிந்த யட்சிதா அதிர்ந்து போய் செய்வ தறியாது திகைத்தார். என்னை காப்பாற்றுங்கள் என்னை காப்பாற்றுங்கள் என வீட்டின் வெளியே வந்து அலறினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து இவர் மீது பற்றி தீயை போராடி அணைத்தனர். 

இந்த தீ விபத்தில் யட்சிதாவிற்க்கு 80 சதவீதம் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. மேலும் அருகில் இருந்தவர்கள் யட்சிதாவை விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில்சிகிச்சைக்கு சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி யட்சிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து யட்சிதாவின் தந்தை பெரியநாயகம் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இட த்திற்கு விரைந்து சென்று யட்சிதாவின் உடலை ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News