உள்ளூர் செய்திகள்

காட்டுமன்னார்கோவில் அருகே அடகு கடையில் ேபாலி நகையை அடகு வைத்து மோசடி செய்த பெண்

Published On 2022-11-17 07:04 GMT   |   Update On 2022-11-17 07:04 GMT
  • 10 கிராம் எடையுள்ள போலி தங்க வளையல்களை அடமானம் வைத்து ரூ. 31 ஆயிரம் பெற்று சென்றுள்ளார்
  • வினோத் அந்த பெண்ணை பிடித்து காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஓமாம்புலியூர் கிராமத்தில் அடகு கடை கடந்த 7 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.இதனை வினோத் நடத்திவருகிறார். கடந்த 10-ந் தேதி இந்த கடைக்கு வந்த பெண் ஒருவர் தனது குழந்தைகள் வளையல்கள் என பொய் சொல்லி 10 கிராம் எடையுள்ள போலி தங்க வளையல்களை அடமானம் வைத்து ரூ. 31 ஆயிரம் பெற்று சென்றுள்ளார் பின்னர் வினோத் அதனை மாற்றி அருகில் உள்ள வங்கியில் அடகு வைக்க முயன்றபோது அது போலி நகை என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அதே பெண்மணி மீண்டும் வேறுஒரு போலி நகையை வைக்க மீண்டும் அதே அடகு கடைக்கு வந்தார். அப்போது அந்த நகையை சோதித்த பார்த்த போது அது போலி நகை என தெரியவந்தது. உடனே உரிமையாளர் வினோத் அந்த பெண்ணை பிடித்து காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் இந்த பெண்ணுடன் மேலும் 2பேர் வந்து உள்ளனர். பிடிபட்ட பெண்ணின் பெயர் சத்யா(வயது38)சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்ததுபின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த பெண்ணுடன் வந்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News