உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அருகே நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய 13 பேர் மீது வழக்கு

Published On 2023-07-10 07:26 GMT   |   Update On 2023-07-10 07:26 GMT
  • 3 சென்ட் நிலத்தை சகாதேவன் செல்விக்கு இன்னும் அளந்து தரவில்லை
  • புகார் அளிக்கப்பட்டு அதுவும் விசாரணையில் இருந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நாகக்குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இருசன் மனைவி செல்வி (வயது 41), இவர் அதே நாகக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சகாதேவனிடம் 10 சென்ட் நிலம் கிரையம் பெற்றதாக கூறப்படுகிறது. இதில் 3 சென்ட் நிலத்தை சகாதேவன் செல்விக்கு இன்னும் அளந்து தரவில்லை என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக செல்வி, சகாதேவன் குடும்பத்தினரிடம் தனக்கு சேர வேண்டிய நிலத்தை கொடுக்கவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதனால் எழுந்த பிரச்சனையில் சின்ன சேலம்போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதுவும் விசாரணையில் இருந்து வருகிறது. இதற்கிடையில் செல்விக்கு சேர வேண்டிய இடத்தில் சகாதேவன் குடும்பத்தினர் கல், மண் கொட்டி உள்ளனர். அதைப் பார்த்து செல்வி ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டபோது கோபம் அடைந்த சகாதேவன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சகாதேவன் மகன் மணிகண்டன் இவரது மனைவி கலையரசி சகாதேவனின் மனைவி அங்கம்மாள் மற்றும் உறவினர்கள் ராஜேந்திரன், விண்ணம்மாள், மணிவேல், செல்வம், மணிமாறன், சகாதேவன், பார்த்தசாரதி, வெங்கடேசன், பாஞ்சாலை, சங்கர், உள்ளிட்ட 13 பேர் செல்வியிடம் தகராறு செய்து அசிங்கமாக திட்டி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து செல்வி சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சின்ன சேலம் போலீசார் செல்வியை தாக்கிய 13 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News