உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் அருகே குடும்பத்தகராறில் பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-11-20 13:48 IST   |   Update On 2022-11-20 13:48:00 IST
  • திண்டிவனம் அருகே குடும்பத்தகராறில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • சங்கீதாவின் கணவர் செல்வராஜை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

 விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நெகனூர் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் .இவரது மகள் சங்கீதா (வயது28) என்பவருக்கும், திண்டிவனம் அடுத்த செங்கனிக் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ்(32) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த சிலநாட்களாக சங்கீ தாவிற்கும் செல்வ ராஜிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்தது. இந்நிலையில் சங்கீதா நேற்று மாலை செங்கனி குப்பத்தில் உள்ள தனது கணவரின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த வெள்ளிமேடுப் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்ககு நேரில் சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காகஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் சங்கீதாவின் கணவர் செல்வராஜை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். வரதட்சனை கொடுமையால் சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.

Tags:    

Similar News