உள்ளூர் செய்திகள்

தென்திருப்பேரையில் சூறாவளி காற்றில் மின்கம்பத்தில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-07-22 08:47 GMT   |   Update On 2023-07-22 08:47 GMT
  • மின்கம்பம் உடைந்தும் அடுத்தடுத்து உள்ள 4 மின்கம்பங்கள் ரோட்டில் வளைந்தும் விழுந்தும் கிடந்தது.
  • மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பியில் விழுந்த மரத்தை துண்டு துண்டாக வெட்டி ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினார்கள்.

தென்திருப்பேரை:

தென்திருப்பேரையில் நேற்று பயங்கர சூறாவளி காற்று அடித்தது.

மின்கம்பம் சேதம்

மகர நெடுங்குழைக்காதர் கோவில் தென்புரம் தெற்கு ரத வீதியில் சாலையோரம் உள்ள மரம் மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் மின்கம்பம் உடைந்தும் அடுத்தடுத்து உள்ள 4 மின்க ம்பங்கள் ரோட்டில் வளைந்தும் விழுந்தும் கிடந்தது. அந்த சமையத்தில் பொதுமக்கள் யாரும் அவ்வழியில் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் அந்த வழியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பொதுமக்கள் அவதி

உடனடியாக மின் ஊழியர்கள் விரைந்து மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பியில் விழுந்த மரத்தை துண்டு துண்டாக வெட்டி ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்புற படுத்தினார்கள். இதனால் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரம் தடைபட்டு பொதுமக்களும் வியாபாரிகளும் அவதிப்பட்டனர்.

Tags:    

Similar News