உள்ளூர் செய்திகள்

கடையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் காட்சி.

பட்டாணி கடையில் பயங்கர தீ விபத்து

Published On 2022-11-10 09:36 GMT   |   Update On 2022-11-10 09:36 GMT
  • இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார்.
  • இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் திடீரென கடையில் தீ பற்றி எரிய தொடங்கியது.

தஞ்சாவூர்:

தஞ்சை கீழவாசல் திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் காமராஜ்.

இவர் கீழவாசல் அண்ணாசாலையில் சரபோஜி மார்க்கெட் அருகில் பட்டாணி, அவல் மற்றும் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் திடீரென கடையில் தீ பற்றி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் மளமளவென தீ பற்றி எரிந்து கொண்டி ருந்தது.

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்க தீயை அணைத்தனர்.

இருப்பினும் கடையின் பெருமளவு பகுதி எரிந்து சேதமானது. இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் . முதல் கட்ட விசாரணையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இருப்பினும் தீ விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும்க டையில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து சேதம் அடைந்ததில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது என்று கூறப்ப டுகிறது.இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படு த்தியது.

Tags:    

Similar News