சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி
- சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலியானார்.
- சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடேசன் என்பவர் காரை ஓட்டி வந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மாதவசேரியை சேர்ந்தவர் அமுதா (வயது 47). இவரது கணவனர் வேலு கடந்த 4 ஆண்டுக்கு முன்பு இறந்து போனார். இவர்களது மகன் முத்துசாமி (23) இவர் கச்சிராய பாளையத்திலிருந்து சின்ன சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.கணியாமூர் அருகே உள்ள உணவகம் அருகே சென்ற போது கள்ளக்குறிச்சி யில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடேசன் என்பவர் காரை ஓட்டி வந்தார். இந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் முத்துசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் முத்து சாமியின் உடலை கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இறந்து போன முத்துசாமியின் தாய் அமுதா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.