உள்ளூர் செய்திகள்
- ஐஸ்கிரீம் லோடு ஏற்றி கொண்டு வந்த மினி வேன் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது
- புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் அருகே உள்ள பிராந்தை கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 25). இவர் நேற்று இரவு தஞ்சையில் இருந்து தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருவாரூரிலிருந்து தஞ்சை நோக்கி ஐஸ்கிரீம் லோடு ஏற்றி கொண்டு மினி வேன் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மினிவேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் அரவிந்த் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அரவிந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ க்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.