பொள்ளாச்சி அருகே விபத்தில் வாலிபர் பலி
- மோட்டார் சைக்கிளில் சென்ற நாச்சிமுத்து உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
- ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆனைமலை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடையை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 37). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆனைமலை- சேத்துமடை ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது வேட்டைக்காரன்புதூரை சேர்ந்த காளியம்மாள் (50), வீரம்மாள் (77) ஆகியோர் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அவர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற நாச்சிமுத்து உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு அம்பராம்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நாச்சிமுத்துவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காளியம்மாள், வீரம்மாள் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.