உள்ளூர் செய்திகள்

காரமடை அருகே ெரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

Published On 2023-06-22 14:41 IST   |   Update On 2023-06-22 14:41:00 IST
  • சரவணகுமார் மதுபோதையில் ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
  • கோவை நோக்கி வந்த பயணிகள் ரெயிலில் அடிபட்டு சரவணகுமார் உயிரிழந்தார்.

மேட்டுப்பாளையம்,

காரமடையை அடுத்த மங்களக்கரைப்புதூரை சேர்ந்தவர் சரவணகுமார்(43).இவருக்கு பூர்ணிமா(35) என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.

சம்பவத்தன்று சரவணகுமார் மதுபோதையில், காரமடை சத்யா நகர் அருகே ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த பயணிகள் ரெயிலில் அடிபட்டு சரவணகுமார் உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த மேட்டுப்பாளையம் ெரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News