உள்ளூர் செய்திகள்

காதலை கைவிட்டதால் கல்லூரி மாணவியை தாக்கிய வாலிபர்

Published On 2022-10-30 14:42 IST   |   Update On 2022-10-30 14:42:00 IST
  • தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
  • வாலிபருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது தெரியவந்தது.

கோவை,

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம் பெண். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கல்லூரி மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். அது நாளடைவில் காதலாக மாறியது.இருவரும் ஒருவருக்கு ஒருவரை தீவிரமாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் கல்லூரி மாணவி காதலித்து வந்த அந்த வாலிபருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது அவருக்கு தெரியவந்தது.இதனால் கல்லூரி மாணவி அந்த வாலிபருடன் பேசுவதை நிறுத்தினார். ஆனால் அந்த வாலிபர் தொடர்ந்து வந்து கல்லூரி மாணவியிடம் பேசி வந்தார்.

மேலும் போனில் அழைத்து தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் கல்லூரி மாணவி அவரை கண்டித்து அந்த வாலிபரிடம் பழகுவதை தவிர்த்து வந்தார்.சம்பவத்தன்று மாணவி வழக்கம் போல கல்லூரிக்கு சென்றார்.

மாலை வகுப்பு முடிந்து வீடு திரும்புவதற்காக வெளியே வந்தார்.அப்போது வெளியே அந்த வாலிபர், கல்லூரி மாணவிக்காக காத்திருந்தார். அவர் மாணவி வருவதை பார்த்து அவரது அருகில் சென்று திடீரென அவரை தடுத்து நிறுத்தினார்.

பின்னர் மாணவிடம் என் பேசுவது இல்லை, செல்போனில் அழைத்தால் ஏன் எடுப்பது இல்லை என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இது தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி இதுகுறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News