வேப்பூரில் 10-ம் வகுப்பு மாணவியை இரும்பு கம்பியால் தாக்கிய ஆசிரியர்
- இப்பள்ளியில் நேற்று மாலை சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது.
- வலி தாங்காமல் துடித்த மாணவி, பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு சென்றார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அதே பகுதியில் உள்ள மகாலட்சுமி நகரில் வசிக்கும் 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இப்பள்ளியில் நேற்று மாலை சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது. நேற்று மாலை 6 மணிக்கு வகுப்பு இடைவேளை விடப்ப ட்டது. அப்போது மாணவிகள் வெளியில் அமர்ந்து பேசிக்கொ ண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மாணவியின் பின்புறம் அடித்துள்ளார். இதில் அந்த மாணவியின் கையில் பலத்த அடிபட்டது. வலி தாங்காமல் துடித்த மாணவி, பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு சென்றார்.
நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறினார். அவர்கள் மாணவியை உடனடியாக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மாணவியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என கருதிய மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் வேப்பூர் போலீ சாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மாணவியிடம் விசாரணை நடத்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு காவ்யா உத்தரவிட்டார். அதன்படி வேப்பூர் போலீசார் விருத்தாசலம் அரசு மருத்து வமனைக்கு சென்று மாணவி யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.