உள்ளூர் செய்திகள்

நெல்லை மாநகரில் கோழிக்கறி விலை திடீர் உயர்வு- கிலோவுக்கு ரூ.50 வரை அதிகரித்தது

Published On 2023-06-11 09:01 GMT   |   Update On 2023-06-11 09:01 GMT
  • தற்போது வீடுகள் தோறும் இறைச்சி சாப்பாடு மிகவும் அதிகமாக உள்ளது.
  • கடந்த வாரம் கோழி இறைச்சியின் விலை ரூ. 220 வரை விற்பனை செய்யப்பட்டது.

நெல்லை:

தற்போதைய கால சூழ்நிலையில் சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அசைவ உணவுகள்

வீட்டில் அந்த உணவுகளை சமைத்தாலும், விதவிதமான அசைவ உணவுகளை ஓட்டல்களில் இருந்து வீட்டிற்கே வரவழைத்து உண்ணுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். விடுமுறை நாட்கள், கோவில் திருவிழாக்கள் நடைபெறும் காலங்களில் மட்டுமே பொதுமக்கள் அசைவம் சாப்பிட்டு வந்த நிலை மாறி தற்போது வீடுகள் தோறும் இறைச்சி சாப்பாடு மிகவும் அதிகமாக உள்ளது.

நெல்லையில் நாட்டுக் கோழிகளை விட பிராய்லர் கோழி இறைச்சியை தான் அதிகம் பேர் விரும்பி வாங்கி சமைக்கின்றனர். கடந்த வாரம் வரை 1 கிலோ கோழி இறைச்சியின் விலை ரூ. 200 முதல் ரூ. 220 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பிராய்லர் கோழி விலை கடு மையாக அதிகரித்து ள்ளது.

திடீர் உயர்வு

நேற்று ரூ. 260 ஆக இருந்த நிலையில், இன்று சந்திப்பு பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் ஒரு கிலோ ரூ. 300 வரை விற்பனையானது. எலும்பு இல்லா கோழி இறைச்சி ரூ. 350 வரையிலும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தச்சநல்லூர், பேட்டை, டவுன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோழி இறைச்சி கடைகளில் ஒருகிலோ ரூ. 280 வரையிலும் விற்கப்பட்டது. 

Tags:    

Similar News