உள்ளூர் செய்திகள்

குமாரபாளையம் அருகே கல்குவாரியில் மூழ்கி மாணவன் பலி

Published On 2023-04-13 09:57 GMT   |   Update On 2023-04-13 09:57 GMT
  • கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறேன். எனக்கு மனைவியும், காவியா, கவின் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
  • எதிர்பாராத விதமாக கவின் அந்த கல்குவாரியில் மூழ்கி இறந்துவிட்டான். தீயணைப்பு துறையினர் எனது மகனின் உடலை மீட்டனர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த கல்லுக்கட்டியூரை சேர்ந்த கந்தசாமி (வயது 38) என்பவர், நாமக்கல்மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதா வது:-

நான், குமாரபாளையம் தாலுக்கா, கல்லுக்கட்டியூர் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறேன். எனக்கு மனைவியும், காவியா, கவின் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

அதில், கவின் படவீடு டவுன் பஞ்சாயத்தில் உள்ள சங்கர் மேல்நிலைப் பள்ளி யில், 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த, 3-ந் தேதி, எனது மகன் கவின் தன்னுடன் படிக்கும் சக மாண வர்களு டன், பச்சாம்பாளை யம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் குளிப்பதற்காக சென்றுள்ளான்.

எதிர்பாராத விதமாக கவின் அந்த கல்குவாரியில் மூழ்கி இறந்துவிட்டான். தீயணைப்பு துறையினர் எனது மகனின் உடலை மீட்டனர். வெப்படை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். தினமும் கூலி வேலைக்கு சென்று கஷ்ட ஜீவனம் நடத்தி வருகிறோம். என் மகன் படித்து, எங்கள் குடும்பத்தின் நிலையை உயர்த்துவான் என நம்பிக்கையில் இருந்த எங்களுக்கு, அவனது இறப்பு மிகப்பெரிய இழப்பு.

அதனால், எங்கள் குடும்பத்தின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு வழங்கும் முதல்வரின் நிவா ரண நிதி உதவி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News