உள்ளூர் செய்திகள்
ஆன்மீக பாதயாத்திரை சென்றவர்கள்.
ராணிப்பேட்டையில் ஆன்மீக பாதயாத்திரை
- 63 நாட்கள் 1157 கி.மீ நடை பயணம்
- உலக மக்களின் நலன் காக்க வேண்டி யாத்திரை
அரக்கோணம்:
வலையபட்டி சித்தர் பச்சைகாவடிஐயா அவர்கள் ஆறுபடை வீட்டிற்கு 63 நாட்கள் 1157 கி.மீ பாதயாத்திரையாக நடை பயணம் மேற்கொண்டு அரக்கோணம் வழியாக திருத்தணி முருகன் கோயில் வந்தடைந்தார்.
உலக மக்களின் நலனுக்காக மழை வேண்டி மக்கள் பெரும் தொற்றில் இருந்து விடுபட ஆனை முகத்தான் திருவடிகளை வேண்டி முருகப்பெருமானின் ஆறுபடை வீட்டிற்கு ஐந்தாவது முறையாக ஆன்மீக பாதயாத்திரை செல்கிறார்.
பிள்ளையார்பட்டியில் இருந்து புறப்பட்டு பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, அரக்கோணம், வழியாக ஆறுபடைவீடு திருத்தணி வந்தடைந்தார்.