உள்ளூர் செய்திகள்
புலியடி வாய்க்காலில் மதகு அமைத்து தர வேண்டும்- கலெக்டரிடம், விவசாயிகள் மனு
- புலியடி வாய்க்காலின் மதகு கடந்த ஆண்டு காணாமல் போய்விட்டது.
- விவசாயிகள் அறுவடை நேரத்தில் கடும் அவதி அடைந்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
பூதலூர் அருகே உள்ள கங்கை சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கண்ணன் மற்றும் விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
வெண்ணாறு கோட்டம் பூதலூரில் ஆனந்த காவிரி கிளையான புலியடி வாய்க்காலின் மதகு கடந்த ஆண்டு காணாமல் போய்விட்டது.
இதனால் விவசாயிகள் அறுவடை நேரத்தில் கடும் அவதி அடைந்தனர். எனவே மேற்படி வாய்க்காலில் மதகு அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.