உள்ளூர் செய்திகள்

நெல் பயிர்களை நாசம் செய்த ஒற்றை யானை

Published On 2022-12-26 15:33 IST   |   Update On 2022-12-26 15:33:00 IST
  • ஜவளகிரி வனச்சரக பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
  • இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜவளகிரி வனச்சரக பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை நேற்று அதிகாலை ஓசட்டி கிராமத்திற்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டிருந்த நெல் வயலுக்குள் இறங்கி பயிர்களை தின்றும் காலால் மிதித்தும் நாசம் செய்தன.

இதை அறிந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் டார்ச் லைட் அடித்து சத்தம் போட்டு வனப்பகுதிக்கு யானையை விரட்டினர்.

ஆனால் ஒரு மணி நேரமாக அதே இடத்தில் நின்று பயிர்களை காட்டு யானை தின்று கொண்டிருந்ததால் விவசாயிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கிராம பகுதிகளில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் ஒசட்டி, கண்டகானப்பள்ளி, தாவரக்கரை உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News