உள்ளூர் செய்திகள்

ஒற்றை யானை வேரோடு சாய்த்த தென்னையை படத்தில் காணலாம்.

திருக்குறுங்குடி அருகே ஒற்றை யானை அட்டகாசம் - தென்னை மரங்களை சாய்த்தது

Published On 2023-03-17 14:53 IST   |   Update On 2023-03-17 14:53:00 IST
  • பகல் நேரங்களில் மலையடிவார புதர்களில் பதுங்கும் யானை இரவில் விவசாய தோட்டங்களுக்குள் நுழைந்து வருகிறது
  • ஒற்றை யானை மிகுந்த ஆக்ரோஷத்துடன் இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

களக்காடு:

திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் கடந்த 1 வாரமாக ஒற்றை காட்டு யானை சுற்றி வருகிறது. பகல் நேரங்களில் மலையடிவார புதர்களில் பதுங்கும் யானை இரவில் விவசாய தோட்டங்களுக்குள் நுழைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவில் விவசாய தோட்டங்களில் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த 3 தென்னை மரங்களை பிடுங்கி எறிந்தது. இந்த சத்தம் கேட்டு வந்த விவசாயிகள் யானையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானை நீண்ட நேரத்திற்கு பின்னரே தோட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளது. ஒற்றை யானை மிகுந்த ஆக்ரோஷத்துடன் இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். யானைக்கு மதம் பிடித்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். யானை நடமாட்டத்தால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். ஒற்றை யானை நடமாடும் பகுதி திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்லும் பாதை ஆகும். மேலும் யானைக்கு மதம் பிடித்திருக்கலாம் என்று விவசாயிகளும் புகார் தெரிவித்துள்ளதால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆபத்து நிலவுவதாக கூறுகின்றனர். எனவே அச்சுறுத்தி வரும் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், பக்தர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News