மாயமான யஸ்வந்த்.
பரமத்தி அருகே கடைக்குச் சென்ற பள்ளி மாணவன் மாயம்
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அர்த்தனாரி பாளையம் அருகே உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 14-ந் தேதி காலையில் வீட்டிலிருந்த யஸ்வந்த் அப்பகுதியில் உள்ள கடைக்கு பொருள் வாங்குவதற்காக சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை .
- வழக்கு பதிவு செய்து கடைக்குச் சென்ற சிறுவன் யஸ்வந்த்தை யாராவது கடத்திச் சென்று விட்டார்களா ?அல்லது யஸ்வந்த் தானாக எங்காவது சென்று விட்டாரா என தீவிரமாக தேடி வருகின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி பழனியப்பா ஆயில் மில் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் .இவரது மகன் யஸ்வந்த்
(வயது 13 ).இவர் அர்த்தனாரி பாளையம் அருகே உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 14-ந் தேதி காலையில் வீட்டிலிருந்த யஸ்வந்த் அப்பகுதியில் உள்ள கடைக்கு பொருள் வாங்குவதற்காக சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை .
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அப்பகுதியில் நீண்ட நேரம் தேடிப் பார்த்தனர்.பிறகு உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கும், பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து யஸ்வந்த் தந்தை குழந்தைவேல் பரமத்தி போலீசில் புகார் செய்தார் .
அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து கடைக்குச் சென்ற சிறுவன் யஸ்வந்த்தை யாராவது கடத்திச் சென்று விட்டார்களா ?அல்லது யஸ்வந்த் தானாக எங்காவது சென்று விட்டாரா என தீவிரமாக தேடி வருகின்றனர்.