உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
பல்லடம் அருகே அரிசி கடையை உடைத்து கொள்ளை
- கடையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்தது.
- ரொக்கம் ரூ.49 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகன் வேணுகோபால்( வயது 37). இவர் பல்லடம் - பூமலூர் ரோட்டில் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு, வீடு சென்ற அவர் வழக்கம்போல நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடையின் ஷட்டரைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த கல்லாப்பெட்டி பூட்டை உடைத்து அதில் வைத்திருந்த ரொக்கம் ரூ.49 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.
இந்த திருட்டு குறித்து அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.