உள்ளூர் செய்திகள்

யானையால் சேதப்படுத்தப்பட்ட ரேசன் கடை.

சின்னமனூர் அருகே அதிகாலையில் ரேசன் கடையை உடைத்து அரிசி கொம்பன் அட்டகாசம்

Published On 2023-05-15 11:22 IST   |   Update On 2023-05-15 11:22:00 IST
  • இன்று அதிகாலை 2 மணியளவில் ஹைவேவிஸ் மணலாறு பகுதியில் உள்ள ரேசன் கடைக்குள் புகுந்த யானை கடையை உடைத்து சென்றுள்ளது.
  • யானை வந்த வழித்தடத்தை உறுதி செய்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

சின்னமனூர்:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை உள்ளிட்ட பகுதியில் 8 பேரைக் கொன்ற அரிசி கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் பிடித்து தேக்கடி அருகே உள்ள பெரியாறு புலிகள் காப்பகத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி விட்டனர். ஆனால் மறுநாளே தமிழக வனப்பகுதிகளான மாவடி, வண்ணாத்திப்பாறை பகுதிகளுக்குள் அரிசிக் கொம்பன் புகுந்தது. அதன் பின் தமிழக வனப்பகுதியான இரவங்கலாறு பகுதிக்குள் அரிசி கொம்பன் புகுந்தது. அங்கிருந்து ஹைவேவிஸ், மணலாறு, தேயிலை தோட்டப்பகுதிகள், அதனை ஒட்டிய வனப்பகுதி களுக்குள் புகுந்தது.

மேலும் இரவு நேரத்தில் மலைச்சாலையில் வந்த அரசு பஸ்சையும் மறித்தது. பொதுமக்கள் யாரையும் தாக்காத நிலையில் கடந்த 5 நாட்களாக சண்முகா நதி அணைக்கு தண்ணீர் வரும் புத்துக்காடு பகுதிக்கு கீழ் உள்ள மரங்கள் அடர்ந்த வனத்தில் அரிசி கொம்பன் இருந்ததாக வனத்துறை யினர் தெரிவித்தனர்.

கடும் வெப்பம் காரணமாக பகலில் இங்கு ஓய்வு எடுக்கும் இந்த யானை மாலை நேரங்களில் வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து உணவு தேடும் பழக்கத்தை கையாண்டது. அரிசி கொம்பனுடன் தற்போது மேலும் 2 பெண் யானைகள் இருப்பதாக வனத்துறை யினர் உறுதி செய்தனர்.

இதனால் யானையின் வேகம் குறைந்து சாந்தமாக காணப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஹைவேவிஸ் மணலாறு பகுதியில் உள்ள ரேசன் கடைக்குள் புகுந்த யானை கடையை உடைத்து சென்றுள்ளது. யானை வந்த வழித்தடத்தை உறுதி செய்த அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறை யின ருக்கு தகவல் தெரி வித்தனர். அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றாலும் குடியிருப்பு, ரேசன் கடைகளை சேதப்படுத்தி வருவதால் தொடர்ந்து பதட்டமான சூழலில் மக்கள் உள்ளனர்.

Tags:    

Similar News