உள்ளூர் செய்திகள்

நத்தமேடு அரசு பள்ளியில் சமைக்கப்பட்ட காலை சிற்றுண்டியை மாணவர்களுடன் ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் பரசுராமன் ஆகியோர் அமர்ந்து சாப்பிட்ட காட்சி.

பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி

Published On 2023-08-23 14:58 IST   |   Update On 2023-08-23 14:58:00 IST
  • பள்ளி மேலாண்மை குழு உறுப்பி னர் அறிவழகன், உணவு தயார் செய்வதை பார்வை யிட்டார்.
  • கடத்தூர் அருகே நத்தமேட்டில் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி தயார் செய்யப்பட்டது.

கடத்தூர்,

தருமபுரி மாவட்டம், ஜம்மண அள்ளி அரசு பள்ளியில் சத்துணவு திட்ட த்தில் காலை சிற்றுண்டியான கோதுமை ரவை, உப்புமா தயார் செய்யப்பட்டு பள்ளி குழந்தைகளுக்கு வழங்க ப்பட்டது.

இதில் சமையலற்கள் முத்துலட்சுமி, மகேஸ்வரி, வினோ ஆகியோர் காலை சத்துணவு தயார் செய்து குழந்தைகளுக்கு வழங்கினர். இவர்களுடன் பள்ளி மேலாண்மை குழு உறுப்பி னர் அறிவழகன், உணவு தயார் செய்வதை பார்வை யிட்டார்.

இந்நிகழ்வை டெப்டி பி.டி.ஒ ராமு கள ஆய்வு மேற்கொண்டார். இதே போல் கடத்தூர் அருகே நத்தமேட்டில் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி தயார் செய்யப்பட்டது.

அப்போது ஒன்றிய கவுன்சிலர் ஜெயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் பரசுராமன், மக்கள் நல பணியாளர் தர்மலிங்கம், ஊராட்சி மன்றத் துணைத் தலைவி லட்சுமி, மகளிர் மன்ற விஜயலட்சுமி, கோபால், ஊராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் உண்ணாமலை, ஆசிரியர் கோவிந்தசாமி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த திட்டத்தில் கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 4 ஆயிரம் குழந்தைகளும், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய பகுதி யில் 3 ஆயிரம் குழந்தை களும் பயன்பெறு வார்கள் என கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News