உள்ளூர் செய்திகள்

சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளான தனியார் பஸ்.


கொடைக்கானலில் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளான தனியார் பஸ்

Published On 2023-07-29 09:47 IST   |   Update On 2023-07-29 09:47:00 IST
  • புகார் தெரிவிக்கப்பட்ட அதே தனியார் பஸ் அப்சர்வேட்டரி பிரதான சாலையில் பஸ் நிலையத்தை நோக்கி வரும் போது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியன் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது
  • கொடைக்கானல் அப்சர்வேட்டரி செல்லும் குறுகிய சாலையில் வைக்கப்பட்டிருக்கும் சிமெண்ட் தடுப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானலிலிருந்து பல்வேறு கிராம பகுதிகளுக்கு அரசு பஸ்கள் மட்டுமின்றி தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சில தனியார் பஸ்கள் அதிக ஹாரன் ஒலி சத்தத்துடன் அதிவேகமாக இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கொடைக்கானலில் இருந்து பூம்பாறை கிராமத்திற்கு செல்லும் தனியார் பஸ் அதிவேகமாக இயக்கப்படுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டு இருந்து வந்தது.

இந்நிலையில் புகார் தெரிவிக்கப்பட்ட அதே தனியார் பஸ் அப்சர்வேட்டரி பிரதான சாலையில் பஸ் நிலையத்தை நோக்கி வரும் போது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியன் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணித்த சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தனியார் பஸ்கள் கொடைக்கானல் மலைச்சாலைகளில் அடிக்கடி அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுத்துவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்

எனவே அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பஸ்கள் மீதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஏர்ஹாரன் பயன்படுத்தும் பஸ்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. தொடர்ந்து கொடைக்கானல் அப்சர்வேட்டரி செல்லும் குறுகிய சாலையில் வைக்கப்பட்டிருக்கும் சிமெண்ட் தடுப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News