உள்ளூர் செய்திகள்

அமைச்சர் மூர்த்தியை ராஜா எம்.எல்.ஏ. சந்தித்து மனு அளித்தபோது எடுத்த படம்.


சங்கரன்கோவிலில் புதிய மாவட்ட பதிவாளர் அலுவலகம் கட்டி தர வேண்டும் - அமைச்சரிடம், ராஜா எம்.எல்.ஏ. மனு

Published On 2023-01-21 09:00 GMT   |   Update On 2023-01-21 09:00 GMT
  • நெல்லை மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு தென்காசி புதிய மாவட்டமாக உருவாகி உள்ளது.
  • மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் மூர்த்தி இதுகுறித்து உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

சங்கரன்கோவில்:

நெல்லை மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு தென்காசி புதிய மாவட்டமாக உருவாகி உள்ளது. இந்த புதிய மாவட்டத்தில் சங்கரன்கோவில், தென்கா சிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நகரமாகும்.

எனவே மாவட்ட பதிவாளர் அலுவலகம் சங்கரன்கோவிலில் அமைக்க வேண்டும். மேலும் சார்பதிவாளர் அலுவலகம் பல ஆண்டுகளாக பழைய கட்டிடத்தில் இயங்கி வருவதால் புதிய கட்டிடமும், வணிகவரித் துறை அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால் அதற்கு புதிய கட்டிடமும் அமைத்து தர வேண்டுமென வலியுறுத்தி வணிகவரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சந்தித்து மனு அளித்தார்.

மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் மூர்த்தி இதுகுறித்து உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Tags:    

Similar News