உள்ளூர் செய்திகள்

காரைக்காலில் நண்பருக்கு கடன் கொடுத்த மோட்டார் சைக்கிள் மாயம்

Published On 2022-10-07 14:05 IST   |   Update On 2022-10-07 14:56:00 IST
  • காளிச்சரன் காரைக்காலில் உள்ள தனியார் மதுபான கடையில் வேலை செய்து வருகிறார்.
  • நண்பர்கள் இருவரும், பல இடத்தில் தேடியும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை.

புதுச்சேரி:

காரைக்கால் திருநள்ளாறு கைலாசநாதர் நகரைச்சேர்ந்தவர் காளிச்சரன். இவர் காரைக்காலில் உள்ள தனியார் மதுபான கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 16.8.22 அன்று, தனது நண்பர் கணேஷ் என்பவர், தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவேண்டும் என அவரது ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை கடன் கேட்டுள்ளார். காளிச்சரனும் மோட்டார் சைக்கிளை கடன் கொடுத்துள்ளார்.

மறுநாள் கணேசிடம் மோட்டார் சைக்கிளை கேட்டபோது, தனது தாயுடன் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் சென்றுவிட்டதாக கூறியுள்ளார். கணேஷ் தஞ்சாவூருக்கு மோட்டார் சைக்கிளுடன் சென்று இருப்பார் என காளிச்சரன் இருந்துவிட்டார். சில நாட்கள் கழித்து, கணேஷ்க்கு போன் போட்டு கேட்டபோது, தான் இன்னும் காரைக்கால் வரவில்லை என கூறியதாக தெரிகிறது. நேற்று முன்தினம் காரைக்கால் வந்த கணேஷ், காளிச்சரனை பார்த்து, 16.8.22 அன்று காரைக்கால் பிரகார வீதியில் உள்ள தனியார் கிளினிக் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தஞ்சாவூர் சென்றதாகவும், வேலை பலுவில் அதை மறந்துவிட்டதாகவும், இன்று வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை என கூறியுள்ளார். 

தொடர்ந்து, நண்பர்கள் இருவரும், பல இடத்தில் தேடியும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை என்பதால், காரைக்கால் நகர காவல்நிலையத்தில் காளிச்சரன் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரகார வீதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன், மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News