உள்ளூர் செய்திகள்

சுகாதாரதுறையினர் மற்றும் செவிலியர்கள் சம்பவ இடத்தில் திரண்டிருந்தனர்.

2-வது குழந்தையை சுகப்பிரசவமாக வீட்டிலேயே பெற்றெடுத்த தாய்

Published On 2022-10-06 09:33 GMT   |   Update On 2022-10-06 09:33 GMT
  • இரண்டாவது குழந்தையை சுகபிரசவத்தில் வீட்டிலேயே பெற்றெடுக்க முடிவு செய்தனர்.
  • நீண்ட நேர காத்திருப்பிற்கு பின் தாய் சேய் நலமாக உள்ளார்களா என பார்த்து விட்டு செல்கிறோம்.

சீர்காழி:

சீர்காழி அருகில் எருக்கூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ஜான். இவரது மனைவி பெல்சியா.

இவர்களுக்கு முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவமணையில் மருத்துவர்களால் பிரசிவிக்க பட்டது.

இதனால் 2-வது குழந்தையை சுகபிரசவம் மூலம் பெற்றெடுக்க விரும்பினர்.

மருத்துவர்கள் முதல் குழந்தை அறுவை சிகிச்சையில் பிறந்ததால் இரண்டாவது குழந்தையும் அறுவை சிகிச்சைதான் என்றனர்.

அதை விரும்பாத தம்பதியினர் இரண்டாவது குழந்தையை சுகபிரசவத்தில் வீட்டிலேயே பெற்றெடுக்க முடிவு செய்துஅதற்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி மருந்து மாத்திரை ஊசிகள் பயன்ப டுத்தாமல் நேற்று மாலை மரூட்டி சுகபிரசவத்தின் வாயிலாக அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர்.

குழந்தை பிறந்து நஞ்சுகொடி (பிளசன்டா) வருவதற்காக காத்திருந்தனர்.

அந்நேரத்தில் அங்கு வந்த சுகாதார துறையை சேர்ந்தவர்களும் அந்த பகுதி செவிலியரும் தம்பதியினரிடம் தாய் சேய் உயிருக்கு ஆபத்து உடனடியாக மருத்துவமனை வரவேண்டும் என்று கூறினர்.

அதற்கு நாங்கள் வீட்டிலேயே பார்த்து கொள்கிறோம் என்று தம்பதியினர் கூறினர்.

நீண்ட நேர காத்திருப்பிற்கு பின் குழந்தை தாய் நலமாக உள்ளார்களா என்று பார்த்துவிட்டு செல்கி றோம் என்று தாயின் கை நாடியை பிடித்து பார்த்துவிட்டு நலமாக உள்ளனர் என்று அங்கிருந்து சுகாதாரதுறையினரும் செவிலியரும் திரும்பி சென்று விட்டனர்.

நாங்கள் நினைத்தபடி சுகபிரசவத்தில் அறுவை சிகிச்சை இல்லாமல் குழந்தை பிறந்ததால் தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News