உள்ளூர் செய்திகள்

உயிர் அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கான குட்டி காவலர்கள் கையேடு

Published On 2023-10-15 08:27 GMT   |   Update On 2023-10-15 08:27 GMT
  • உள்துறை முதன்மை செயலர் அமுதா வெளியிட்டார்
  • கோவை சாலைகளில் ரூ.4.5 கோடி செலவில் போக்குவரத்து சந்திப்புகளில் சி.சி.டி.வி. கேமராக்கள்

கோவை,

கோவை மாநகராட்சி கலையரங்கில் உயிர் அமைப்பின் குட்டி காவலர்கள் சாலை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் நடப்பு கல்வியாண்டுக்கான 3 லட்சம் மாணவர்கள் பயிற்சியேடு மற்றும் ஆசிரியர் கையேடு வெளியீட்டு விழா நடந்தது. இதில் தமிழக உள்துறை முதன்மை செயலர் அமுதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்ட கையேடுகளை வெளி யிட்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி, துணை தலைவர் சரவணசுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், போக்குவரத்து இணை இயக்குநர் எஸ்.கே.எம்.சிவகுமரன், உயிர் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் டாக்டர்.ராஜசேகரன், அறங்கா வலர்கள் மலர்விழி, எஸ்.வி.பாலசுப்பிரமணியம், வி.மோகன், சந்திரசேகர், ரவிசாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் உயிர் அமைப்பு அறங்காவலர் பாலசுப்ரமணியம் பேசுகையில், கோவை மாநகர சாலைகள் அனைவருக்கும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2018-ம் ஆண்டு உயிர் அமைப்பு தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பு சார்பில் கோவை சாலைகளை பாதுகாப்பானதாக மாற்ற ரூ.4.5 கோடி செலவில் போக்குவரத்து சந்திப்புகளில் ஏராளமான சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டது என கூறினார். பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்ட தற்காக உயிர் அமைப்பின் அறங்காவலர்களை அமுதா பாராட்டினார்.

முடிவில் உயிர் அமைப்பின் அறங்காவலர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் தலைவர் எஸ். மலர்விழி நன்றி கூறினார்.

Tags:    

Similar News