குடிபோதையில் வாய்க்காலில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி சாவு
- குடிபோதையில் வாய்க்காலில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி சாவு தங்கை வீட்டு விசேஷத்துக்கு வந்த இடத்தில் சோகம்
- ரவி மது அருந்தியுள்ளார். இதனால் அவரால் நீச்சல் அடிக்க முடியாமல் இறந்திருக்கலாம் என கூறப்பட்டது.
திருச்சி
திருச்சி மணச்சநல்லூர் சிறுகாம்பூர் ஹரிஜன் தெரு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 37). இறைச்சி கடை தொழிலாளி.
இவரது தங்கையை காட்டுப்புத்தூர் அருகே உள்ள சீலை பிள்ளையார் புதூர் பகுதியில் திருமணம் செய்து கொடுத்தார்.
இந்த நிலையில் தங்கை வீட்டு விசேஷத்திற்கு ரவி குடும்பத்துடன் சென்றார்.
பரிதாபச் சாவு
பின்னர் ரவி தனியாக அங்குள்ள வாய்க்காலில் இறங்கி குளித்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவரை வெள்ளம் இழுத்துச் சென்றது. பின்னர் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த அவரை இளைஞர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் காட்டுப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இறந்த ரவி மது அருந்தியுள்ளார். இதனால் அவரால் நீச்சல் அடிக்க முடியாமல் இறந்திருக்கலாம் என கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.