உள்ளூர் செய்திகள்

உயிரிழந்த புஷ்பாம்பாள்- சிவஞானம் தம்பதி.

மனைவி இறந்த துக்கத்தில் உயிர் துறந்த கணவர்

Published On 2023-09-20 14:48 IST   |   Update On 2023-09-20 14:48:00 IST
  • புஷ்பாம்பாளுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
  • சிவஞானம் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த கீழநாகை பகுதியை சேர்ந்தவர் சிவஞானம் (வயது 73). இவரது மனைவி புஷ்பாம்பாள் (70). இவர்களுக்கு திருமணம் ஆகி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் மற்றும் மருமகள், பேரக்குழந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18-ந் தேதி மாலை புஷ்பாம்பாளுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவரை மன்னார்குடி ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

புஷ்பாம்பாள் இறந்த துக்கத்தில் அவரது கணவர் சிவஞானம் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை சிவஞானம் திடீ ரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக உறவினர்கள் அவரை மன்னார்குடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இறப்பிலும் இணைபிரியாத இந்த தம்பதியின் பாசம் அப்பகுதி மக்களையும், குடும்பத்தின் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News