உள்ளூர் செய்திகள்

எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது- கர்ப்பமாக்கிய வாலிபரை பிடிக்க வேட்டை

Published On 2023-09-30 15:21 IST   |   Update On 2023-09-30 15:22:00 IST
  • போலீஸ் தேடுவதை அறிந்ததும் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
  • குழந்தை திருமண சட்டத்தின்கீழும் அந்த வாலிபர் மீதும் குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

சென்னை:

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சிறுமி ஒருவரிடம் பழகிய வாலிபர் அவரை கர்ப்பமாக்கினார். சிறுமிக்கும் வாலிபருக்கும் அவரது குடும்பத்தினர் திருமணமும் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக எழும்பூரில் உள்ள மகப்பேறு ஆஸ்பத்திரியில் சேர்ந்து பெண் குழந்தையை பெற்றுள்ளார்.

இது பற்றி ஆஸ்பத்திரி சார்பில் எழும்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகே சிறுமிக்கு திருமணம் நடைபெற்றதும் அவர் கர்ப்பம் ஆனதும் தெரியவந்தது. இது பற்றி எழும்பூர் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது. போலீசார் தேடி வருகிறார்கள்.

குழந்தை திருமண சட்டத்தின்கீழும் அந்த வாலிபர் மீதும் குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

Tags:    

Similar News